Suriya Decision on Upcoming Movies

இனி என் படங்கள் இப்படித்தான் இருக்குமென சூர்யா தன்னுடைய புதிய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

Suriya Decision on Upcoming Movies : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் வெற்றி குறித்து நடிகர் சூர்யா பேசும்போது ஒரு படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் வெற்றி என்கிறார்கள். ஆனால் என்னை பொருத்தவரை ஒரு படம் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்துத்தான் அமையும்.

இனி கமர்ஷியல் படங்களாக இல்லாமல் படங்களில் கமெர்சியலை குறைத்து வீட்டு கதைகளை சொல்லும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

இதனால் சூர்யா இனி தொடர்ச்சியாக சூரரைப்போற்று படம் போல நல்ல நல்ல தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.