Suriya Birthday Common DP Release Update
Suriya Birthday Common DP Release Update

சூர்யாவின் காமெடி பி புகைப்படத்தை வெளியிட போவது யார் யார் என்பது குறித்த விவரங்களை ஒவ்வொன்றாக வெளியிட தொடங்கியுள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

Suriya Birthday Common DP Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப்படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் காமெடி டிபி புகைப்படத்தை வெளியிட போவது யார் யார் என்பது குறித்த விவரங்களையும் சூர்யா ரசிகர்கள் வெளியிட தொடங்கியுள்ளனர்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட உள்ளார்.அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவில் ரூபாய் 200 கோடி வசூலைக் கொடுத்த ஹீரோக்கள் இவர்கள் தான் – அஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லிஸ்ட்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் என்ற திரைப்படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தயாரிப்பாளர் Guneet Monga அவர்களின் சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட உள்ளார்.

பிரபல தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு அவர்கள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளரான ராஜசேகர், ஞானவேல்ராஜா அவர்களும் சூர்யாவின் காமெடி டிபி புகைப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல் டி இமான், ஷான் ரோல்டன், சாம் சி எஸ், கோவிந் வசந்தா, அரோல் குரோலி மற்றும் பலர் காமெடி புகைப்படத்தை வெளியிட உள்ளனர்.

சூர்யாவின் காமன் டிபி புகைப்படம் வரும் ஜூலை 11ம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.