Suriya As CM in Suriya 40

சூர்யா 40 திரைப்படம் குறித்து தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

Suriya As CM in Suriya 40 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி இருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா 40 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா 40 திரைப்படத்தில் சூர்யா முதல்-அமைச்சர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இது அரசியல் படம் எனவும் தகவல் தீயாக பரவி வந்தது.

ஆனால் தற்போது பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது அரசியல் படம் இல்லை எனவும் இப்படத்தில் சூர்யா முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதனால் பாண்டிராஜ் ஸ்டைலில் பக்கா கிராமத்து கதையாக சூர்யா 40 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.