Suriya And Siva Combo Movie Update

சூர்யாவுடன் கை கோர்க்க உள்ளார் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.

Suriya And Siva Combo Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படத்தின் மூலமாக இயக்குனரக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தை வைத்து வீரம் வேதாளம் விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கினார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் 39வது படமான சூர்யா 39 படத்தை இயக்க இருப்பதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. சூர்யாவின் கால்ஷீட் பிஸியாக இருந்ததால் சிவா அண்ணாத்த திரைப்படத்தை இயக்க சென்றுவிட்டார்.

சூர்யாவும் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார்.

இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை முடித்து நடித்து முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.