Suriya and Karthi in Komban 2

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya and Karthi in Komban 2 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா மற்றும் கார்த்தி. சிவகுமாரின் மகன்களான இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளனர்.

கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் லட்சுமிமேனன் சூரி ஆகியோர் இந்த பாகத்திலும் நடிக்க உள்ளார்கள்.

மேலும் கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்களிடையே கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.