நீட் தேர்வால் அதிகரிக்கும் மாணவர்களின் தற்கொலை குறித்து வேதனையுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Suriya About NEET Exam : இந்தியாவில் மருத்துவ படிப்புகளை பயில நீட் தேர்வு மிக அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவை பிறப்பித்து தொடர்ந்து நீட் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த நீட் தேர்வு காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறாமல் போகிறது.
இந்த வருடம் கூட நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா இது குறித்து மன வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கல்வியை சட்டமாக்க கூடாது என கூறியுள்ளார். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தீ வைத்து அழிக்கும் நீட் தேர்வை ஒன்று சேர்ந்து எதிர்ப்போம் என கூறியுள்ளார்.
