Suriya About Chengattule

மாஸ்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஆல்பம் பாடல் ஒன்றிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

Suriya About Chengatttula Song Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி என இன்று வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிருந்தா சிவக்குமார் தயாரிப்பில் ராம் இசையில் உருவாகியுள்ள செங்காட்டுலே என்ற பாடலுக்கு வாழத்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் மாஸ்டருக்கும் ஒரு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

சூர்யாவும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதால் தொலைபேசி வாயிலாக அவர் வாழ்த்து தெரிவித்திருப்பது என்றம் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.