Suriya 40 shoot begins

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 திரைப் படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

Suriya 40 shoot begins : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள இந்த படத்திற்கு டி இமான் இசை அமைக்க உள்ளார்.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.

இந்தப் படப்பிடிப்பு தொடங்கியது, இதில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை. இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, சுப்பு பஞ்சு, தங்கதுரை ஆகியோரும், நடிகைகள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.