Suriya 40 Music Composer Update

எதிர்பாராத நேரத்தில் சூர்யா 40 படத்தின் சரவெடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Suriya 40 Music Composer Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. கடந்த சில வருடங்களாகவே வெற்றிக்காக போராடி வந்த இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்திருந்த சூரரைப்போற்று திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா 40 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யா 40 திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த பதிவு