Suriya 40 Movie

சூர்யா 40 திரைப்படத்தின் சூட்டிங் இன்று இனிதாக தொடங்கியது.

Suriya 40 Movie Shooting : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியானது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 40 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இமான் இசையமைக்க ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங் செய்ய உள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதற்கான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு இந்த மகிழ்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.