Suriya 40 Movie Cast Details

சூர்யா 40 படத்தில் முதல் ஆளாக இணைந்துள்ளார் பிரபல தமிழ் நடிகர் சத்யராஜ்.

Suriya 40 Movie Cast Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா 40 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் சத்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.