Suriya 1st Salary Before Cinema

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தான் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி சூர்யா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Suriya 1st Salary Before Cinema : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. அஜித், விஜய்க்கு அடுத்ததாக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சூர்யா ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சூர்யாவும் இப்பட அனுபவம் குறித்து தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்.

அப்படியான பேட்டி ஒன்றில் நான் அப்பாவின் வழியில் சினிமாவிற்கு வரவேண்டுமென ஆசைப்படவில்லை. பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தேன்.

அங்கு நான் வாங்கிய முதல் சம்பளம் ரூபாய் 736 தான். அந்த சம்பள கவர் எடை என்ன என்பது கூட எனக்கு இன்றுவரை ஞாபகம் இருக்கிறது என கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நான் ஒரே இடத்தில் அப்படியே நின்றுவிட்டேன். அப்படி இருந்தும் என் மீது அன்பை செலுத்திய ரசிகர்களுக்காக தான் சூரரைப் போற்று என்ற அற்புதமான திரைப்படத்தில் நடித்துள்ளேன்.

இந்த படத்தின் படப்பிடிப்புகளில் புதுவித அனுபவங்களை கற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.