Suresh Raina Sung Surya Song

சூர்யா பட பாடலை பாடி மேடையில் தெறிக்க விட்டுள்ளார் சின்ன தல சுரேஷ் ரெய்னா.

Suresh Raina Sung Surya Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரெய்னாவும் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா கலந்து கொண்ட விருது விழா ஒன்றில் சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெறும் முன்பே வா அன்பே வா என்ற பாடலை பாடி தெறிக்க விட்டுள்ளார். மேலும் இந்த விருது விழாவில் தோனியுடனான நட்பு குறித்தும் அவருடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.