Suresh Chakravarty About Bigg Boss Re-Entry

பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி re entry க்கு அழைக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Suresh Chakravarty About Bigg Boss Re-Entry : விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எவிக்ட் ஆன பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதுவரை ரேகா, நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ் ,சுசித்ரா, சம்யுக்தா, ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.

இருப்பினும் சக போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தி இதுவரை வரவில்லை. இதனை பார்த்த ரசிகர் நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் போகவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு இதுவரை அழைக்கப்படாத ஒரே போட்டியாளர் நான் மட்டும்தான் என பதிலளித்துள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் பிக்பாஸ் ரி- என்ட்ரியில் சுரேஷ் தாத்தா ஓரங்கட்டப்பட்ட காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.