Suresh Chakravarty About Ajith

தல அஜித் குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suresh Chakravarty About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை பல நடிகர் நடிகைகளுக்கு எப்போதும் உண்டு.

அதேபோல் அஜித்துடன் நடித்த நடிகர்-நடிகைகள் அவர்கள் அளிக்கும் பேட்டியில் இப்போதும் அஜித்தை பற்றி இதுவரை பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே பேசியுள்ளனர். அந்த அளவிற்கு அஜித் அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை பெற்று உள்ளார்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

தல அஜித்தை அவர் மகாத்மா என தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு நல்லவர் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என சொல்வார்கள் அஜித்தின் உடல் முழுவதும் அவர் நல்லவர் என்பதை காட்டும் என பேசியுள்ளார்.

மேலும் மகாத்மா என்றால் மிகப் பெரிய வார்த்தை அதை அஜித்திற்கு சொல்கிறீர்கள் என்றால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் அது என்ன என கேட்டதற்கு நீங்க விஜய் கிட்ட கூட போய் கேளுங்க அஜித்தை பற்றி நல்ல விஷயமாகத்தான் சொல்லுவார் என தெரிவித்துள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/kamaljii/status/1321127004448509952?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.