Suresh Chakravarthy About ReEntry in BB4

சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

Suresh Chakravarthy About ReEntry in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா என நான்கு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆக்டிவான போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறீர்களா என கேட்டதற்கு அதை நீங்கள் பிக்பாஸில் தான் கேட்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய உடனே அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செய்வீர்கள் என்று கேட்டதற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்வேன் என சுரேஷ் கருத்து கூறியுள்ள நிலையில் தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.