Super Star About Political Entry

இன்னமும் புதிய கட்சி ஆரம்பிக்காதது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Super Star About Political Entry : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் மறைவிற்குப் பிறகு தமிழக அரசின் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறி பலர் அரசியல் களத்தில் இறங்கி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பல்வேறு நடிகர்கள் அரசியல் பக்கம் தாவ தொடங்கியுள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தளபதி விஜய்யும் விரைவில் அரசியலில் களம் இறங்குவார் என கூறப்பட்டு வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால் அறிவிப்போடு அவரது செயல்பாடுகள் நின்றுள்ளன.

தொடர்ந்து அரசியல் கட்சி அறிவிப்பை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதன் காரணமாக தான் புதிய கட்சியைத் தொடங்கவில்லை என ரஜினி கூறியது போல சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இதனையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் எனக்கு என் உயிர் மீது கவலை இல்லை. என்னை நம்பி வருபவர்கள் நலன் மீது தான் கவலை என தெரிவித்துள்ளார். அதனால் தான் அரசியல் கட்சி தொடங்கும் வேலையை தள்ளி போட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.