Super Singer Shivaangi
அஜித், விஜய் பற்றி பேசி விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார் சூப்பர் சிங்கர் சிவாங்கி.

Super Singer Shivaangi Interview Speech : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சிவாங்கி.

இவர் தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட கோமாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிவாங்கி பேட்டி ஒன்றில் பேசியிருப்பது அவரை பிரச்சனையில் சிக்க வைத்துள்ளது.

அதாவது அந்த பேட்டியில் அஜித்துக்கு தங்கச்சியாகவும் விஜய்க்கு தங்கச்சியாகவும் மகளாகவும் நடிக்க ஆசை என கூறியுள்ளார். ரஜினிக்கும் மகளாக நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விஜய்க்கு மகளாக நடிக்க வேண்டும் என சிவாங்கி கூறியது ரசிகர்களை சிலரை கோபமடைய செய்துள்ளது. எங்க தளபதிக்கு என்ன அவ்வளவு வயசா ஆகிடுச்சு? எப்படி நீங்க அப்படி சொல்லலாம்? என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.