Super Singer Haripriya With Ajith

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலமான ஹரிப்பிரியா தல அஜித்தை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Super Singer Haripriya With Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை அந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை படங்களில் நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை இருந்த அஜித் சமீப நாட்களாக அதிகமாக பொதுவெளிகளில் நடமாட தொடங்கியுள்ளார். சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த இவரது புகைப்படம் கூட இணையத்தில் பரவியிருந்தது.

இப்படி அந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் இந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னர் ஆன ஹரிப்பிரியா சமீபத்தில் தல அஜித்தை சந்தித்து உள்ளார். அப்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகிய தீயாக பரவி வருகிறது. மேலும் இவர் வலிமை திரைப்படத்தில் ஏதாவது ஒரு பாடலை பாடி இருக்கலாம் அப்போது அஜித்தை சந்தித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Attachments area