Sundari Serial Gabriella With Husband

சன் டிவி சுந்தரி சீரியல் நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sundari Serial Gabriella With Husband : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் சன் டிவி. இந்த சேனலில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி.

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கேப்ரெல்லா. இவர் டிக் டாக் மூலமாக தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.

அவரின் நடிப்பு திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் சுந்தரி சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது.

தன்னுடைய நீண்ட கால நண்பரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.