உடம்பில் மலைப்பாம்பை நெளிய விட்டு பார்ப்போரை பதற வைத்துள்ளார் சன் டிவி சீரியல் நடிகை.

Sundari Gabriella Photoshoot With Snake : தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் தற்போது டிக் டாக் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த நடிகைகளும் நடிக்கத் தொடங்கிவிட்டனர்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியல் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரெல்லா. இதற்கு டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் வெப்சீரிஸ் தொடர்களில் நடித்தார். இவருடைய உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பாக சுந்தரி சீரியல் அமைந்துள்ளது.

சீரியலில் நடிக்கத் தொடங்கியதும் கேபிரெல்லா மற்ற நடிகைகளைப் போல போட்டோஷூட் நடத்தியுள்ளார். மலைப் பாம்பை தன் உடல் மீது மெல்லிய விட்டு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. மேலும் காட்டு விலங்கை துன்புறுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.