Sunaina
சுனைனாவிற்கு திருமணம் ஆகி விட்டதாக பரவி வரும் தகவலுக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுனைனா. காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார், அதன் பின்னர் எந்த படமும் அவருக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் விஜயின் தெறி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார், இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணமாகி விட்டதாக கேட்டதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

எனக்கு திருமணமாகவில்லை, திருமணம் என்றால் நானே அறிவிப்பேன். என்னை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

சில்லு கருப்பட்டி படத்தில் சுனைனாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இவர் வெப் சீரிஸ் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.