Sunaina in Bigg Boss4

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது தேர்தலில் கலந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார்.

Sunaina About Bigg Boss4 : தமிழ் சினிமாவின் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுனைனா. அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் தொடர்ச்சியாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இறுதியாக சுனைனா நடித்திருந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து தற்போது சுனைனா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்துக் கொடுப்பார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஒருபோதும் நான் இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுனைனா கலந்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.