Summer Release 2020
மாஸ்டர் படத்துடன் டாப் ஹீரோ படம் ஒன்றும் பிரபல இயக்குனரின் படம் ஒன்றும் மோத இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறை கொண்டாட்டமாக ஏப்ரலில் வெளியாக உள்ளது.

இந்த படத்துடன் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படமும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் இந்த படமும் சம்மர் ரிலீஸ் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சூர்யாவுடன் சேர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் கொம்பு வச்ச சிங்கமடா படமோ அல்லது எம்.ஜி ஆர் மகன் திரைப்படமோ ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது.

எனவே இந்த கோடையில் மூன்று படங்கள் மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜெயிக்க போவது யாரா இருக்கும்??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.