சுல்தான் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Sulthan Official Teaser : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து ஜோதிகாவுடன் இணைந்து நடித்த தம்பி திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

Sultan Official Teaser

அதன்பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. டீசர் செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.