Sulthan Movie Teaser Update

நடிகர் கார்த்தியின் சுல்தான் பட டீசர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

Sulthan Movie Teaser Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனான இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சுல்தான். கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா நடித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் ரிலீசுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சுல்தான் பட டீசர் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு ‌அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.