Sulthan Movie Second Single

கார்த்திக்காக சிம்பு பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sulthan Movie Second Single : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. சிவக்குமாரின் இளைய மகனான இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகினார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் செகண்ட் சிங்கிளாக இவ்வளோ அழகா யாரையும் பார்த்ததில்ல என்ற பாடல் வெளியானது.

இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிம்பு தன்னுடைய படத்தில் பாடியதற்காக கார்த்தி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.