Sulthan Movie Twitter Review

சுல்தான் திரைப்படம் எப்படி இருக்கு என விமர்சனங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sultan Movie Twitter Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது.

அதிகாலை ஐந்து மணிக்கே படம் வெளியாகி விட்டதால் சமூக வலைதள பக்கங்களில் படம் குறித்த விமர்சனங்கள் வெளியாக தொடங்கிவிட்டன.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவல் கார்த்தியின் நடிப்பு செம மாஸ், ராஷ்மிகா மந்தனா செம அழகாக கும்தாவாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா பிஜிஎம் செம மாஸ் என கூறி வருகின்றனர். அதே போல் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது போலவும் சில விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.