கார்த்தி, ராஷ்மிகா கூட்டணியில் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Sultan Movie First Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளன.
இறுதியாக வெளியான கடைக்குட்டி சிங்கம், கைதி உள்ளிட்ட படங்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது இருந்து வருகிறது.
இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நாளை மூன்று முப்பது மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற தொடங்கி உள்ளது. இதோ அந்த போஸ்டர்