Sudha Kongara Upcomming Movie

இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Sudha Kongara Upcomming Movies : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆனால் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த சூர்யாவிற்கு சூரரைப்போற்று என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் சுதா கொங்கரா.

இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுதா கொங்கரா தல அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் அஜித் அப்படி வலிமை படத்தில் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2021 வரை செல்லும் என்பதால் அஜித் படத்தை தொடங்குவதற்கு முன் வேறு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சுதா கொங்கரா.

சுதா கொங்கரா இயக்கவுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சூர்யாவும் கார்த்தியும் தங்களது படங்களின் இயக்குனர்களை மாற்றி மாற்றி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது சூர்யாவை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.