Sudha Kongara About Thala 61
Sudha Kongara About Thala 61

இயக்குநர் சுதா கொங்கரா பெயரில் பதிவாகியுள்ள ட்வீட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Sudha Kongara About Thala 61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க வினோத் இயக்குகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து தல அஜித் இறுதி சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இயக்குநர் அட்லியின் திருமண விழாவில் விஜய் பாட்டுக்கு செம குத்து குத்திய சிவகார்த்திகேயன் – வைரலாகும் அரிய வீடியோ!

இந்த நிலையில் தற்போது சுதா கொங்கரா பெயரில் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த பதிவில் விரைவில் அட்டகாசமான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். சுதா கொங்கரா மறைமுகமாக தல 61 குறித்து தான் தெரிவிக்கிறார் என பேசி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் இது சுதா கொங்கராவின் ட்விட்டர் கணக்கு அல்ல என்பது தான் உண்மை. அவருடைய பெயரில் உலா வரும் போலி கணக்கு என கூறப்படுகிறது.

https://twitter.com/Sudhakongara_of/status/1304131057923448832?s=19