Sudha Kongara About Her Favourite Actor

இயக்குநர் சுதா கொங்கரா தன்னுடைய ஃபேவரைட் நடிகர்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

Sudha Kongara About Her Favourite Actor : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று படத்தை இயக்கிய இவர் தற்போது பாவம் கதைகள் என்ற வெப்சீரிஸ் தொடரில் ஒரு பகுதியை இயக்கியுள்ளார்.

சுதா கொங்கரா மற்றும் சூரியா இணைந்து பணியாற்றிய சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக்கியுள்ளது.

இருப்பினும் தான் எத்தனை படங்களில் எத்தனை ஹீரோக்களுடன் பணியாற்றினாலும் தன்னுடைய ஃபேவரிட் நடிகர் சூர்யாவோ அஜீத்தோ விஜய்யோ இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என தெரிவித்துள்ள சுதா‌.

சிறு வயதிலிருந்தே எனக்கு ரஜினிகாந்த்தை பிடிக்கும். அவருடைய படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வாங்கித் தருமாறு அப்பாவிடம் சண்டை போட்டு உள்ளேன்.

அந்த காலத்தில் பெண்களுக்கு கமல்ஹாசன் மீது தான் கிரஷ். ஆனால் எனக்கு ரஜினிகாந்த்தை தான் பிடிக்கும் அவர் மீது தான் அன்பு அதிகம் என தெரிவித்துள்ளார். இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.