Sudha Kongara about Direct Vijay
Sudha Kongara about Direct Vijay

தளபதி விஜயை இயக்குவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளத்துள்ளார் சுதா கொங்கரா.

Sudha Kongara about Direct Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை அடுத்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சுதா கொங்கரா இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்தக் கூட்டணி அமையவில்லை என்பது தெரிய வந்தது.

சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ விஜய் இல்ல.. இவருடன் தான் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் புது தகவல்.!

ஆனால் தற்போது மீண்டும் விஜய், சுதா கொங்கரா கூட்டணி இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சுதா கொங்கரா அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதாவது நான் எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் இல்லை என்னுடைய பெயரில் இயங்கும் போலி கணக்குகளை பின் தொடர்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

விஜய்யை இயக்குவதாக வைரலாகும் தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார்.