Suchitra About Balaji Murugadoss

பிக்பாஸ் பாலாவின் உண்மையான முகம் இதுதான் என சுசித்ரா பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Suchitra About Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பாடகி சுசித்ரா சென்றிருந்தார். உள்ளே சென்ற ஆரம்பத்தில் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற சுசித்ரா அதன் பின்னர் மற்ற போட்டியாளர்களை போல டம்மி பீஸ் ஆகிவிட்டார்.

மேலும் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி அழுது ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் டிவியே இவரை வெளியே அனுப்ப முடிவு செய்ததாகவும் பேசப்பட்டு வந்தது.

அதற்கேற்றார் போலவே கடந்த வாரம் குறைவான ஓட்டுகளை பெற்று சுசித்ரா பிக்பஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை பாலாவிடம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார்.

பாலாவிடம் என்ன சண்டை வந்தாலும் உடனே அதனை மறந்து விட்டு அவரிடம் பேச தொடங்கி விடுவார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலா தன்னுடைய பெற்றோர் குறித்து பேசி கண்ணீர் விட்டு அழுத புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்துடன் மனதில் எதையும் வைத்துக்கொள்ள தெரியாதவர். இந்த முகத்துக்கு எதையும் பொய்யாக செய்யத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் பாலாவிற்கு தான் ஆதரவாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.