குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொள்வது குறித்து பதில் அளித்துள்ளார் சுசித்ரா.
Suchi in Cook With Comali 3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதியோடு முடிவடைய உள்ளது.
இந்த சீசன் முடிவடைந்து ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மூன்றாவது சீசன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கி விடும் என தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை ஓரளவிற்கு மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற வியூகமும் தற்போதில் இருந்தே வெளியாக தொடங்கி விட்டது. ரசிகர் ஒருவர் பாடகி சுசித்ராவிடம் நீங்கள் குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொள்ள வேண்டும்.. உங்களை விடுவதாக இல்லை என கூறியுள்ளார்.
அதற்கு சுச்சி அப்படியொரு எண்ணம் இருந்தால் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர் குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கமல்ஹாசனையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் மீண்டும் இவரை விஜய் டிவி அழைக்க வாய்ப்பில்லை, ஒருவேளை அழைத்தால் சுச்சி என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.