Diwali 2020

தீபாவளி அவசியமா என்பது பற்றி தீபாவளி சித்தாந்தமும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் பேச்சாளர் சுப வீரபாண்டியன் வெளியிட்ட வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதியான நேற்று தீபாவளி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழக மக்கள் நம்பிக்கையை சீர்க்குலைக்கும் விதமாக திமுக ஆதரவாளர் / பேச்சாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தீபாவளி சித்தாந்தமும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தீபாவளித் திருநாள் என்பது தமிழர்கள் பண்டிகை அல்ல.. இது சமணர்கள் கொண்டாடிய பண்டிகை. இந்த பண்டிகையை இந்துக்கள் பண்டிகையாக மாற்றிக் கொண்டார்கள்.

இது சமணர்களின் ஸ்ரீபுராணம் நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் அதாவது பனிக்காலம் தொடங்கிவதை கொண்டாடும் விதமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது என கூறியுள்ளார்.

நரகாசுரனை அழிக்கப்பட்ட நாள் தான் தீபாவளி என்பதற்கான குறிப்பு எந்த நூலிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தீபாவளி குறித்து பல்வேறு தகவல்களை அவர் பேசியுள்ளார்.

சமண மற்றும் பௌத்த மதங்களின் இந்து மதத்தில் அதிகரித்துள்ளது என்பது போல அவர் பேசினார். இந்த வீடியோ குறித்து டாக்டர் சுமந்த் ராமன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக சுப வீர பாண்டியன் பேச்சு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுப வீரபாண்டியன் அவர்களின் தீபாவளி குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.