தமிழக முதல்வரின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் நிஜமான மருத்துவர் கனவு - நன்றி கூறிய மாணவ மாணவிகள்.!!

Students Thanks to Tamilnadu CM : மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது என்பது கடினமான ஒன்றாக மாறியது.

இதனால் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் கட்டணம் இல்லாமல் மருத்துவ படிப்பு பயில ஏதுவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 400 ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். பள்ளி செல்லும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தையை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலும் அரசி அல்லது அரசு நிதியுதவி பள்ளிகளில் பைரவர் தன் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்கான கல்வி உதவித்தொகை 75 ஆயிரமாக உயர்த்தி உள்ளது.

தற்போது இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயில தேர்வாகியுள்ள மாணவர்களில் மேலே குறிப்பிட்டது போன்ற விபத்தில் பெற்றோரை இழந்தவர்களின் மாணவர்களும் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு பயில தேர்வாகியுள்ளனர். அவர்கள் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.