STR47 With GVM

நடிகர் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

STR47 With GVM : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது.

அந்தப் படத்தை தொடர்ந்து 10 தல என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சிம்புவின் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும் சிம்பு நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படம் பற்றிய மேலும் தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.