STR Next Movie Update

சம்பளமில்லாமல் சிம்பு நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

STR Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த சிம்பு தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து குச்சி போல் மாறினார்.

இதனையடுத்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துக்கொண்டு செம பிசியான நடிகராக மாறி உள்ளார் நடிகர் சிம்பு.

இப்படியான நிலையில் தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தலாமா வேண்டாமா என ஆலோசனை நடத்தி வந்த சமயத்தில் நடிகர் சிம்பு தாமாக முன்வந்து தான் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.

இந்த படத்தின் மூலமாக கிடைக்கும் நிதியை வைத்து நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்யுமாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்புவின் இந்த முடிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சிம்புவுக்கு தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.