STR in Latest photos

நீச்சல் குளத்தில் கருப்பு நிற உடையில் கெத்தான லுக்கில் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

STR in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கிய நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க தாமதமாக காரணத்தினால் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்திற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பழைய சிம்பு போல ஸ்லிம்மான லுக்கிற்கு மாறியுள்ளார்.

தற்போது நீச்சல் குளத்தில் கருப்பு நிற உடையில் செம மாசான லுக்கில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.