STR and GVM Movie Update

மீண்டும் 39 வயது நடிகையுடன் சிம்பு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

STR and GVM Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது.

ஆனால் சிம்பு இதில் நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறிய காரணத்தினால் தற்போது கௌதம் மேனன் புதிய கதை ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.

அதில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 39 வயதாகும் அனுஷ்காவை நடிக்க வைக்க கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சிம்புவும் அனுஷ்காவும் வானம் திரைப்படத்தில் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் கௌதம் மேனன் படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக வெளியான தகவல் சிம்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனுஷ்காவும் தமிழில் ஒரு நல்ல re-entry-க்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.