STR-39

சிம்பு மற்றும் சுசீந்திரன் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

STR 39 Music Composer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருந்து வருகிறது. கொரானா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்த படத்திற்கு முன்னதாக சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்துக் கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்எஸ் தமன் இசையமைக்க உள்ளார்.

இவர் அடுத்ததாக தளபதி விஜய் அவர்கள் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 65 படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.