Story of Jagame Thandhiram
Story of Jagame Thandhiram

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் கதை என்ன என்பதை பிரபல நடிகர் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார்.

Story of Jagame Thandhiram : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சன நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ என்பவர் நடித்துள்ளார்.

நான் அப்பவே அப்படி.. இப்போ சொல்லவா வேணும்?? மாஸ்டர் பற்றி மாஸான வீடியோ வெளியிட்ட இயக்குனர்.!

இவர் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படத்தின் கதை களம் என்ன என்பதை தெரிவித்துள்ளார்‌.

அதாவது லண்டனில் இந்தியர்களால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க அன்பே தாதாவாக இருக்கும் ஜேம்ஸ் காஸ்மோ இந்தியாவை சேர்ந்த லோக்கல் தாதாவான தனுஷை வேலைக்கு அமர்த்துகிறார்.

அவரிடம் வேலைக்குச் சென்ற தனுஷ் அவருக்கு வில்லனாக மாறி விடுகிறார். ஏன் என்னவானது அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதைக்களம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் மதுரையை பின்னணியாக கொண்டு மீசைவைத்த கெட்டப் மற்றும் லண்டன் தாதாவாக ஒரு கெட்டப் என இரண்டு கெட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தனுஷ் பட்டாசு படத்தைப்போலவே அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

39 வயதில் கவர்ச்சி தேவையா? விமர்சித்தவர்களுக்கு பிரபல தமிழ் நடிகை கொடுத்த பதிலடி

எது எப்படி இருந்தாலும் படத்தில் நிச்சயம் கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் மேஜிக் பல இடங்களில் ஒரு வொர்க் அவுட் ஆகி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமையும் என நம்புகின்றனர்.

தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் இந்த படத்தை ஓட்டி வழியாக வெளிவிட அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படக்குழு என்ன முடிவெடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.