vijay2
பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சூசமாக தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Story behind vijay talk in bigil audio function – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

அந்த மேடையில் பேசிய விஜய் ‘என் பேனர்களை கிழியுங்கள். கட் அவுட்டுகளை உடையுங்கள். ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்’ எனப்பேசினார்.

சர்கார் படம் வெளியான போது சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் அவரின் பேனரை அதிமுகவினர் கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டதை மனதில் வைத்தே விஜய் பேசினார்.

எப்படி இருந்தது ரசிகர்களின் ரியாக்க்ஷன் தெரியுமா ? பிகில் இசை வெளியீட்டு விழா .!

அதேபோல், சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீது, பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என அதிமுக அரசை மறைமுகமாக சாடினார்.

அதாவது, பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை என்பதை மனதில் வைத்தே விஜய் பேசியதாக தெரிகிறது.

அதேபோல், யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமியின் அரசையே விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் ஏமார்ந்த ரசிகர்கள் – இப்படி கூடவா பண்ணுவாங்க

‘தலைவா’ பட பிரச்சனையில் இருந்தே அதிமுக அரசு மீது விஜய் கோபமாக இருப்பதாகவே தெரிகிறது. விஜயின் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் சென்னை நேர் அரங்கில் நடத்த வேண்டும் என்றே அவர் ஆசைப்படுகிறார்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு அதை அனுமதிப்பதில்லை. எனவேதான், தொடர்ந்து விஜய் தனியார் கல்லூரிகளில் தனது பட விழாக்களை நடத்துகிறார்.

எல்லாவற்றையும் மனதில் வைத்தே நேற்று பிகில் பட விழாவில் விஜய் கொட்டி விட்டதாக கூறப்படுகிறது.

விஜயின் பேச்சுகளுக்கு அதிமுகவினர் ஒவ்வொருவராக எதிர்வினை ஆற்றத்துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.