Statue for Vijay in Karnataka

தளபதி விஜய்க்கு சிலை அமைத்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Statue for Vijay in Karnataka : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, என பல
திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பொங்கலன்று இப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக பார்த்து கொண்டாடி வந்தனர். தற்போது மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் 23 மில்லியன் டாலர்களை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் முதல் இடம் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் தளபதி விஜய்க்கு சிலை வைத்து மாஸ்டர் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.