ரம்யா எஸ்கேப்பானதை அடுத்து சோம் சேகருடன் ஷிவானியை சேர்த்து வைக்க அர்ச்சனா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Start Music Promo Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சோம் சேகர்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ரம்யா பாண்டியன் மீது காதல் கொண்டார். ஆனால் இவர்கள் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது அர்ச்சனா சோம் மற்றும் ஷிவானியை சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.