மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Stalin attended wedding of bangaaru adigalar family – மேல்மருவத்தூரில் பிரசித்த பெற்ற ஆதிபராசக்தி கோவிலின் நிறுவனர் பங்காரு அடிகளார். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் ஏராளமான கல்லூரி, பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உண்டு. இவரின் மகன் அன்ழகனின் மகள் மருத்துவர் மதுமலருக்கும், பிரசன்ன வெங்கடேஷ் என்கிற மணமகனுக்கும் நேற்று மாலை ஆதிபராசக்தி திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நரம்புத்தளர்ச்சி நீக்கும் மாதுளம் பூவின் நன்மைகளைப் பார்ப்போமா?

இந்த விழாவில் யாரும் எதிர்பார்த்திராத வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ செல்வம் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலினை அன்பழகன் கட்டி அணைத்து வரவேற்றார். அதன்பின் மேடைக்கு சென்ற ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டது கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. திமுக ஐ.டி. பிரிவில் கூட இந்த செய்தி கசியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.