Sri Divya

கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன.

Sri Divya Photos Without Makeup : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா.

இந்த படத்தில் கிடைத்த வெற்றியின் வரவேற்பைத் தொடர்ந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனாலும் தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

விரைவில் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க முயற்சி செய்து சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் டெடிபியர் உடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

மேக்கப் இல்லாமல் ஸ்ரீதிவ்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடா அடடா என்ன அழகு என்ன அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.