Sri Devi Blast Vanitha Vijayakumar

உனக்கு புருஷனும் புடவையும் ஒன்னா? அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க என வனிதாவை விளாசி எடுத்துள்ளார் அவரது தங்கச்சி.

Sri Devi Blast Vanitha Vijayakumar : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரின் மூத்த மகள் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக அவரது அறிமுகப் படமான சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

சில படங்களில் நடித்த வனிதா ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்து இருவரையும் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் காதலில் இருந்து வந்தார். அவளைத் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி வீடியோக்களை பதிவிட தொடங்கினார்.

இந்த யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து அவரையும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து வனிதாவின் தங்கை ஸ்ரீதேவி பேட்டி ஒன்றில் முதல் முறையாக வனிதா பற்றிப் பேசியுள்ளார்.

அதாவது புடவை மாத்திற மாதிரி புருஷனை மாத்துறா. இனிமேலாவது அந்த குழந்தைகளுக்காக வாழனும் என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவி தனுசுக்கு ஜோடியாக தேவதையை கண்டேன் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.