Special Interview With Subbaraju And Director Hemanth Madhukar

YouTube video

Managaram Hindhi Remake Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கணகராஜ். இவர் தமிழ்த் திரையுலகில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக கைதி என்ற படத்தை இயக்கினார். தற்போது தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மாநகரம் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக ஏற்கனவே இது வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனையடுத்து தற்போது இப்படம் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது இந்தியில் மாநகரம் படத்தின் ரீமேக் படத்தை சந்தோஷ் சிவன் இயக்க விக்ராந்த் மாசே மற்றும் சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் புலி சாமி 2 ஆகிய படங்களைத் தயாரித்த ஷபு தமீன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படமான மாநகரம் இந்தியில் ரீமேக்காவது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.